< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி; துணை ராணுவப் படையினர் நாளை தமிழகம் வருகை
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி; துணை ராணுவப் படையினர் நாளை தமிழகம் வருகை

தினத்தந்தி
|
29 Feb 2024 9:32 PM IST

15 கம்பெனி துணை ராணுவப் படையினர் நாளை (மார்ச் 1-ந்தேதி) தமிழ்நாட்டிற்கு வர உள்ளனர்.

சென்னை,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதற்கான ஆயுத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் நாளை (மார்ச் 1-ந்தேதி) தமிழ்நாட்டிற்கு வர உள்ளனர். தொடர்ந்து மார்ச் 7-ந்தேதி மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் வர உள்ளனர். ஒரு கம்பெனிக்கு 90 துணை ராணுவப் படையினர் இடம் பெற்றிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்