< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
9 Sept 2023 11:24 PM IST

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூ கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் லலிதா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை வகித்தார். வார்டு செயலாளர் பட்டாசு குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். மக்கள் தி.மு.க.வை நம்ப தயாராக இல்லை. வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் லீலா சுப்பிரமணியம், துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ரமேஷ், தம்பா கிருஷ்ணன், சோடா வாசு, நகராட்சி கவுன்சில் எஸ்.எம்.எஸ்.சதீஷ், மின்சார வாரிய மண்டல தலைவர் சி.ரங்கநாதன், மதன் உள்பட வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் என்.என்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்