< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
3 Feb 2024 3:43 PM IST

தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா ஆகியோர் அடங்கிய குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு வார்த்தை நடத்துகிறது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., துணைச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் நான்கு தொகுதிகள் அடங்கிய விருப்பப்பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.கவிடம் வழங்க உள்ளது. இந்த நான்கு விருப்ப தொகுதிகளில் இருந்து இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்