< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் பூங்காகள்

தினத்தந்தி
|
22 May 2022 10:33 AM IST

ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராக இருக்கும் பூங்காகள்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கொரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வரும் 25 ம் தேதி 45 வது கோடை விழா மலர் கண்காட்சிக்கு ஏற்காடு தயாராகி வருகிறது.இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

அதற்காக அங்குள்ள கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு கண்ணாடி மாளிகையில் மலர் கண்காட்சிக்காக சுமார் ஐந்து லட்சம் மலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும் அண்ணா பூங்காவிலும் ஏறி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கோடை விழா மலர் கண்காட்சிக்காக மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து,விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி,குழந்தைகளை குதூகலமாக சின்-சான் பொம்மை ,வள்ளுவர் கோட்டம் ,போன்ற உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது .சுற்றுலா பயணிகள் அமர இரண்டு குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் பயிரிட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் பூக்கள் மலர்ந்து சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்

படகு இல்லத்தில் படகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் சுற்றுலா பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.கோடை விழா மலர் கண்காட்சியின் போது கூடுதலாக பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரு வழி பாதையாக மாற்ற நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

மேலும் செய்திகள்