< Back
மாநில செய்திகள்
கார் நிறுத்துவதில் தகராறு: நடிகர் தாடி பாலாஜியின் மனைவி கைது
சென்னை
மாநில செய்திகள்

கார் நிறுத்துவதில் தகராறு: நடிகர் தாடி பாலாஜியின் மனைவி கைது

தினத்தந்தி
|
29 Jan 2023 11:18 AM IST

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணி (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரது வீட்டின் எதிரே நித்யா (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் மணி வீட்டாருக்கும் கார் நிறுத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நித்யா தனது காரை சேதப்படுத்தியதாக மாதவரம் போலீஸ் லையத்தில் மணி புகார் செய்தார். இது தொடர்பாக மாதவரம் போலீசார் நித்யாவை கைது செய்து உடனடியாக போலீஸ் ஜாமீனில் விடுவித்தனர். இவர் சினிமா நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜியின் மனைவி ஆவார்.

மேலும் செய்திகள்