< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
பூங்கா அமைக்கும் பணி
|3 March 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் பூங்கா அமைக்கும் பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 21 லட்சத்தில் கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள குளத்தை ஆழப்படுத்தி சீரமைத்தல் மற்றும் புதிதாக பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக நடை பயிற்சி பாதையுடன் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், குளத்தை சரியான முறையில் சீரமைக்க வேண்டும். மேலும் பூங்காவில் சிறுவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் நல்ல தரமான முறையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் குமரன், பொறியாளர் முருகன், தூய்மைப்பணி ஆய்வாளர் சையது காதர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.