விருதுநகர்
உடற்பயிற்சி உபகரணங்களுடன் பூங்கா
|உடற்பயிற்சி உபகரணங்களுடன் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
சாத்தூர்,
சாத்தூர் நகராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காவினை கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். சாத்தூர் நகராட்சியில் பெரியார் நகர் வார்டு 1-ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பூங்காவும், வார்டு 4-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம் கூடிய புதிய பூங்காவையும் திறந்து வைத்தார். இதில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர்மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை 1-வது வார்டு கவுன்சிலர் செண்பகவல்லி வெற்றிச்செல்வன், 4-வது வார்டு கவுன்சிலர் கணேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.