< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு மாலை, சால்வை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு மாலை, சால்வை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்

தினத்தந்தி
|
24 Jun 2023 6:45 PM GMT

முதுகுளத்தூர் அருகே மாணவ-மாணவிகளுக்கு மாலை, சால்வை அணிவித்து பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினர்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே எம்.கொட்டக்குடி கிராமத்தில் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியர், 6 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். நாளடைவில் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மாணவர்கள் இன்றி பள்ளியை மூடும் அவல நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தங்களது கிராம பள்ளி மூடுவிழா காணும் நிலையை அறிந்த கிராம மக்கள் கிராம கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். கிராமம் ஒன்று கூடிய கூட்டத்தில் கிராமத்தில் இருந்து நாள்தோறும் கமுதி, முதுகுளத்தூர், அபிராமம், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மெட்ரிக் ஆங்கில வழி கல்வி நிலையங்களுக்கு 25 மாணவ-மாணவிகள் சென்று வந்தவர்களை தங்களது கிராம பள்ளியில் தமிழ் வழி கல்வியில் பயில கிராம ஊர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று தமிழ் வழி கல்வி பயில சென்ற புதிய மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் சால்வை, மாலை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் குழு தலைவர் தர்மராஜன், மாணவர்களின் பெற்றோர், கிராம பொதுமக்கள் அன்புடன் வரவேற்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்