< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை: ஆசிரியர் பாலியல் தொந்தரவு; பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
|29 July 2022 12:24 PM IST
கோவை அருகே உள்ள பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கோவை:
கோவை சுகுணாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உடல் பயிற்சி ஆசிரியராக பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.