< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சிதிலமடைந்த அங்கன்வாடியால் பெற்றோர்கள் அச்சம்

தினத்தந்தி
|
10 Sept 2022 12:11 AM IST

வடகாடு அருகே சிதிலமடைந்த அங்கன்வாடியால் பெற்றோர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

வடகாடு அருகேயுள்ள அனவயல் தடியமனை பகுதியில் அங்கன்வாடி உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. குறிப்பாக கட்டிடத்தின் உட்புற பகுதிகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசிந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் குழந்தைகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் இந்த கட்டிடத்தின் மேற்கூரை எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் விட பெற்றோர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்