திருவாரூர்
அரசு பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
|முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டை அருகே உள்ள இடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதராசு தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாகராஜன், பள்ளி கல்வி மேலாண்மை குழு தலைவி பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியம் குறித்து பேசப்பட்டது. ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டு பாடங்களை மாணவர்கள் வீட்டில் செய்கிறார்களா என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் எடுத்து கூறப்பட்டது. கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியை இந்திரா வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் பாக்யராஜ் நன்றி கூறினார்.