< Back
மாநில செய்திகள்
துணை ராணுவத்தினர் வாகன சோதனை
ஈரோடு
மாநில செய்திகள்

துணை ராணுவத்தினர் வாகன சோதனை

தினத்தந்தி
|
13 Feb 2023 7:10 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பறக்கும்படை குழுவினருடன் இணைந்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பறக்கும்படை குழுவினருடன் இணைந்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

துணை ராணுவம் வருகை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் இடைத்தேர்தல் பணியில் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனிகளின் துணை ராணுவ வீரர்கள் ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். அவர்கள் பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

வாகன சோதனை

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம், காளைமாட்டு சிலை, பி.பி.அக்ரஹாரம், சுண்ணாம்பு ஓடை, வீரப்பம்பாளையம் பிரிவு, வெண்டிபாளையம், பெருந்துறை ரோடு, சத்தி ரோடு உள்பட மொத்தம் 15 இடங்களில் நேற்று வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகளுடன் இணைந்து துணை ராணுவத்தினரும் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் ஈடுபட்டார்கள்.

ஒவ்வொரு வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டன. அப்போது கார், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களின் பெயர், முகவரியை அதிகாரிகள் சேகரித்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்