< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  தேசிய ஒற்றுமை ஜோதி ஓட்ட மாணவர் படையினருக்கு வரவேற்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் தேசிய ஒற்றுமை ஜோதி ஓட்ட மாணவர் படையினருக்கு வரவேற்பு

தினத்தந்தி
|
29 Nov 2022 12:07 AM IST

பரமத்திவேலூர்:

தேசிய மாணவர் படை உதயமான 75-வது ஆண்டு பவள விழாவையொட்டி டெல்லியில் உள்ள தேசிய மாணவர் படை இயக்குனரகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரையிலான ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தேசிய ஒற்றுமை தொடர் ஜோதி ஒளிச்சுடர் ஓட்டம் கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் கடந்த 20-தேதி தொடங்கியது. ராணுவ அதிகாரி கர்னல் பத்வான் தலைமையில் தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு கரூர் வழியாக நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை வந்தடைந்தனர்.

இங்கு அவர்களுக்கு ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை பரமத்திவேலூர் காவிரி ‌‌பாலம் அருகே இருந்து தொடங்கிய தொடர் ஜோதி ஒளிச்சுடர் ஓட்டத்தை நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு 15-வது பட்டாலியன் நிர்வாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கர்னல் ஜயதீப் மற்றும் கந்தசாமி கண்டர் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரிகள், கல்லூரியின் தலைவர் மற்றும் முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த தொடர் ஓட்டம் கபிலர்மலை, ஜேடர்பாளையம், சோழசிராமணி வழியாக ஈரோடு, சேலம், வேலூர் வழியாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம் வழியாக டெல்லி சென்றடைகிறது. மொத்தம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 60 நாட்களில் தொடர் ஓட்டம் மூலம் கடந்து செல்கின்றனர். ஜனவரி மாதம் 18-ஆம் தேதி டெல்லியை சென்றடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்