நாமக்கல்
பரமத்திவேலூர் பகுதியில் மஞ்சள் விலை தொடர் சரிவு விவசாயிகள் கவலை
|பரமத்திவேலூர் பகுதியில் மஞ்சள் விலை தொடர் சரிவு விவசாயிகள் கவலை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பகுதியில் மஞ்சள் விலை தொடர் சரிவு காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மஞ்சள்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, கொத்தமங்கலம், ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், வடகரையாத்தூர், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பெரியசோளிபாளையம், குரும்பலமகாதேவி, சின்னமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கு ஏற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.
இங்கு விளையும் மஞ்சள்கள் ஈரோடு, சேலம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மஞ்சளுக்கு உரிய விலை இல்லாததால் மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதை தவிர்த்து கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கவலை
இதனால் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் செய்யப்பட்டு வந்த மஞ்சள் தற்போது 500 ஏக்கர் வரை மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். கடந்த மாதம் 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையானது.
தற்போது 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மஞ்சள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மஞ்சள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.