< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பரமக்குடி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
|3 Jan 2023 12:38 AM IST
பரமக்குடி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
பரமக்குடி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே சொர்க்கவாசல் முன்பு வந்து நின்றனர். சொர்க்கவாசல் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 5.15 மணிக்கு பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா.. என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி தரிசித்தனர். பின்பு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.