மதுரை
மதுரை சாலைகளில் 27 கார்கள் அணிவகுப்புடன் ஒத்திகை நடந்தது
|மீனாட்சி அம்மனை தரிசிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மதுரை வருகிறார். இதையொட்டி 27 கார்கள் அணிவகுப்புடன், அவரது நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நேற்று நடந்தது.
மீனாட்சி அம்மனை தரிசிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மதுரை வருகிறார். இதையொட்டி 27 கார்கள் அணிவகுப்புடன், அவரது நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நேற்று நடந்தது.
ஜனாதிபதி மதுரை வருகை
ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக தமிழக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, இன்று பகல் 11.45 மணிக்கு மதுரை வந்து சேருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் காரில் புறப்பட்டு 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைகிறார்.
அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.
கோவிலில் இருந்து 12.45 மணிக்கு மேல் புறப்பட்டு, அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.
ஒத்திகை
ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்திலும், அங்கிருந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பகுதிகளிலும், கோவில் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி நிகழ்ச்சிகளுக்கான ஒத்தி்கை நேற்று மதுரையில் நடந்தது. ஜனாதிபதிக்கு என்று தனியாக 2 கார்கள் உள்ளிட்ட 27 கார்கள் அணிவகுத்து, விமான நிலையத்தில் இருந்து கோவிலை நோக்கி 11.45 மணிக்கு புறப்பட்டன. அந்த அணிவகுப்பு விமான நிலையத்தில் இருந்து, பெருங்குடி, அவனியாபுரம் சுற்றுச்சாலை, வில்லாபுரம், தெற்குவெளிவீதி, கீழவெளிவீதி, விளக்குத்தூண், வெங்கலக்கடை தெரு, கீழச்சித்திரை வீதி வழியாக கோவிலை 12.08 மணிக்கு வந்தடைந்தது. ஒத்திைகக்காக சிறப்பு பாதுகாப்பு படை டி.ஜ.ஜி. மகேஷ்குமாரை கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
மீண்டும் ஒத்திகை
ஜனாதிபதி தரினசம் முடிந்து 12.45 மணிக்கு மீண்டும் அங்கிருந்து புறப்படுவது ேபான்ற ஒத்திகையானது, வெங்கல கடைத்தெரு, விளக்குத்தூண், கீழவெளிவீதி வழியாக ஏ.வி.பாலம். கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம், அவுட்போஸ்ட் வழியாக அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையை மதியம் 1 மணிக்கு சென்றடைந்தது. மீண்டும் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, விமான நிலையம் சென்றடைவது போன்று அந்த ஒத்திகை நடந்து முடிந்தது..
முதலில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஜனாதிபதி சுமார் ஒரு மணி நேரம் இருப்பதாக கூறப்பட்ட பயண திட்டத்தை தற்போது மாற்றி, சுற்றுலா மாளிகையில் அவர் ஒரு மணி நேரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் கூட்டம்
ஜனாதிபதி வருகை தொடர்பாக போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையில் கமிஷனர் அலுவலகத்தில், சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதில் ஜனாதிபதி வருகை தரும் பகுதியில் செய்துள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து விவாதிக்கபட்டது.
இதற்கிடையில் ஜனாதிபதி தரிசனத்தை முன்னிட்டு, கோவிலில் காலை 10 மணிக்கு வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவாார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் பக்தர்கள் எத்தனை மணி வரை அனுமதி என்பது குறித்து அதிகாரபூர்வமாக நேற்று எதுவும் அறிவிக்கப்படவில்லை. கோவிலை சுற்றியுள்ள கடைகள் வழக்கம் போல் திறந்து இருக்கலாம் என்றும், கடையில் 2 பேர் மட்டும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சோதனை
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ரோந்து சுற்றி வந்தனர். ஒத்திகையின் போது சற்்று நேரம் அம்மன் சன்னதியாக வழியாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ேபாலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, வேறு வழியாக அனுமதிக்கப்பட்டனர்.