< Back
மாநில செய்திகள்
பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
வேலூர்
மாநில செய்திகள்

பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
24 Jun 2023 5:39 PM GMT

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு ஒன்றியம் சாத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது.

மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் வெங்கட்ராமன், பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார மருத்துவ அதிகாரி கலைசெல்வி வரவேற்றார். அமலுவிஜயன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் 35 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று ரத்த அழுத்தம், எக்கோ, ஈ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.

மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை கண், காது மூக்கு, பல், எலும்பு, மனநல குறித்து சிகிச்சைகள் அளித்து இலவச மருந்துகள் வழங்கினர்.

182 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 100 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. முகாமில் 220 பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் பதிவு செய்யப்பட்டது.

முகாமில் தாசில்தார் நெடுமாறன், பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, எழிலரசி, பேரணாம்பட்டு நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல், துணை தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத், ஒன்றிய திமுக செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் பங்கேற்றனர். முடிவில் தேசிய சிறார் திட்ட மருத்துவ அதிகாரி சிவக்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்