< Back
மாநில செய்திகள்
பண்ணாரி சோதனைச்சாவடிக்கு வந்த காட்டு யானைஅறையின் கதவை பூட்டி பதுங்கிய வனத்துறையினர்
ஈரோடு
மாநில செய்திகள்

பண்ணாரி சோதனைச்சாவடிக்கு வந்த காட்டு யானைஅறையின் கதவை பூட்டி பதுங்கிய வனத்துறையினர்

தினத்தந்தி
|
16 Oct 2023 6:51 AM IST

பண்ணாரி சோதனைச்சாவடிக்கு காட்டு யானை வந்தால் அறையின் கதவை பூட்டி வனத்துறையினர் பதுங்கினாா்கள்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்து பண்ணாரியில் திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை, போலீஸ் துறை, போக்குவரத்து துறை ஆகியவற்றின் சார்பில் தனித்தனியாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த சோதனைச்சாவடி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டட வனப்பகுதியில் அமைந்து உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்லும். அவ்வாறு கடந்து செல்லும் வனவிலங்குகள் பண்ணாரியில் உள்ள சோதனைச்சாவடிகள் பகுதிக்கு வரும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பண்ணாரி சோதனைச்சாவடியை நோக்கி வந்தது. காட்டு யானையை கண்டதும் அங்கு பணியில் இருந்த வனத்துறையினர், தாங்கள் இருந்த அறையின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே பதுங்கி கொண்டனர். சிறிது நேரம் அந்த பகுதியில் காட்டு யானை உலா வந்தது. பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மேலும் செய்திகள்