< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
பானிபூரி கடைக்காரருக்கு கத்திக்குத்து
|6 Sept 2023 12:15 AM IST
நீடாமங்கலத்தில் பானிபூரி கடைக்காரருக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது
நீடாமங்கலம்:
திருப்பத்தூர் மாவட்டம் பள்ளத்தூரைச் சேர்ந்தவர் ராகுல்(வயது 24). நீடாமங்கலம் கோரையாறு மேல்கரை பகுதியில் வசித்து வரும் இவர் நீடாமங்கலம் ெரயில்வே கேட் அருகே பானி பூரிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நீடாமங்கலம் கைக்களர் தெருவை சேர்ந்த சங்கர் மகன் மாதவன் (21) அடிக்கடி பானிபூரி கடன் கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் ராகுல் கடைக்கு சென்று பானிபூரி கடன் கேட்டார். அப்போது ராகுல் பானிபூரி தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த மாதவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகுலை குத்தியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்குசென்று மாதவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.