தஞ்சாவூர்
பானிபூரி வியாபாரி சாவு
|பட்டுக்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பானிபூரி வியாபாரி உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பெரமையன். இவருடைய மகன் வினோத்குமார்(வயது 18). இவர் பானிபூரி விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் பரக்கலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.இதில் படுகாயமடைந்த வினோத்குமார் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய அவரை மீண்டும் உடல் நலம் குன்றிய நிலையில் அறந்தாங்கியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை டாக்டர் அறிவுறுத்தலின் பேரில் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வினோத்குமார் உயிரிழந்து விட்டதாக கூறினர். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.