மதுரை
மதுரையில் பயங்கரம்:வீட்டு மாடியில் தொழிலாளி கொடூர கொலை-தீவிர விசாரணை
|வீட்டு மாடியில் தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.
புதூர்,
வீட்டு மாடியில் தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.
தொழிலாளி கொலை
மதுரை திருமோகூர் பெருமாள் நகரை சேர்ந்தவர் அப்துல்ரசாத். இவருடைய மகன் கட்டுவா ஒலி (வயது 39). திருமணம் ஆகவில்லை. சில்வர் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆடு உரிக்கும் தொழிலும் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் ஒத்தக்கடை சரோஜினி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தலையில் பலத்த காயங்களுடன் ெகாலை செய்யப்பட்டு கிடந்தார்.
பின்னணி என்ன?
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கட்டுவா ஒலியின் உடலை பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் தூங்கும் போது தலையில் கல்லை தூக்கிப்போட்டும், ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்து விட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது தெரியவந்தது.
கொலை செய்தவர்கள் யார்? அதன் பின்னணி என்ன? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.