< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு

தினத்தந்தி
|
20 Oct 2022 1:30 AM IST

திருச்சுழி அருகே அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சுழி,

திருச்சுழி அருகே அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி முற்றுகை

திருச்சுழி அருகே மேலப்பரளச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயிலும் சில மாணவர்களிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் தவறு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீரென மேலப்பரளச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் அவர்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அப்போது மேலப்பரளச்சி அரசு பள்ளியின் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்