< Back
மாநில செய்திகள்
பில்லங்குளம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பில்லங்குளம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா

தினத்தந்தி
|
6 April 2023 1:30 AM IST

பில்லங்குளம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளம் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி திருவீதிஉலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று வள்ளி-தெய்வானை சுப்பிரமணியர், திருக்கல்யாண நிகழ்ச்சியும், சக்தி அழைத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது. இதில் பில்லங்குளம் மற்றும் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்