< Back
மாநில செய்திகள்
பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
சிவகங்கை
மாநில செய்திகள்

பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தினத்தந்தி
|
25 March 2023 6:45 PM GMT

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைெயாட்டி இன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 8.30 மணி அளவில் மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வருகிறார். தொடர்ந்து தினசரி காலையில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார். இரவு ஒரு வாகனத்தில் திருவீதி உலா வருவார். 8-ம் திருநாளான ஏப்ரல் 2-ந் தேதி மாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருநாளான 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரியும் இரவு கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கு வேண்டிய ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன், மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்