திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்...!
|திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா வருகின்ற 26-ந்தேதி தொடங்கி அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.
27-ந்தேதி விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது.
28-ந்தேதி இரவு 7 மணிக்கு தங்ககுதிரை வாகனத்திலும், 29-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 30-ந்தேதி அன்ன வாகனத்திலும், 31-ந்தேதி சேஷ வாகனத்திலும், ஏப்ரல் 1-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 2-ந்தேதி தங்க மயில் வாகனத்திலும், 3-ந்தேதி வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4-ந்தேதி பச்சைக் குதிரை வாகனத்திலும், 5-ந்தேதி தங்க குதிரை வாகனத்திலும், 6-ந்தேதி தங்கமயில், குதிரை வாகனத்திலும், 7-ந்தேதி பச்சை குதிரை வாகனத்திலும், 8-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும்,9-ந்தேதி திருத்தேரிலும், 10-ந்தேதி தங்கமயில் வாகனத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 1-ந்தேதி (சனிக்கிழமை) கைப்பாரம், 5-ந்தேதி பங்குனி உத்திரம், 6-ந்தேதி சூரசம்கார லீலை, 7-ந்தேதி பட்டாபிஷேகம், 8-ந்தேதி பகல் 12.20 மணிக்கு மேல் 12.40மணிக்குள் திருக்கல்யாணம், 9-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.