ராமநாதபுரம்
பாண்டிக்கண்மாய் ஆதிநாராயணமூர்த்தி வீர பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
|பாண்டிக்கண்மாய் ஆதிநாராயணமூர்த்தி வீரபெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பரமக்குடி,
பாண்டிக்கண்மாய் ஆதிநாராயணமூர்த்தி வீரபெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆதிநாராயணமூர்த்தி ேகாவில்
பரமக்குடி தாலுகா மஞ்சூர் எல்லையில் பாண்டிக்கண்மாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதிநாராயணமூர்த்தி வீரப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அறுபத்தோர் பந்தி இருபத்தோர் சேனதான பரிவாரங்கள், வீரசக்தி, குழலியம்மன், தொட்டிச்சி அம்மன், கருப்பணசுவாமி, முனியப்பசுவாமி, தவசி ராமாயி, ஆண்டி, காமாட்சி அம்மன், பெரியாண்டி, பாதாள காளி, ஆலடி கருப்பு, மறவமகள், அரச மகள், லாட சன்னாசி, வேடன் வேடச்சி, ராக்கச்சி, பேச்சி, சங்கிலி கருப்பு, சோனை கருப்பர், மாடன் ஆகிய சுவாமிககுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 24-ந்தேதி மாலை கணபதி பூஜை செய்யப்பட்டு காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடந்தது.
கும்பாபிஷேகம்
அதைத்தொடர்ந்து நேற்று காலை 9.45 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில் சிவஸ்ரீ சிவா பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அப்போது கும்பாபிஷேகத்தை காண திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பி சுவாமியை தரிசித்தனர். பின்பு மூலவர் உள்பட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவிலின் பரம்பரை டிரஸ்டிகள் கரு.பாலகிருஷ்ணன், கருரா. முருகானந்தம் குடும்பத்தினருக்கு கோவில் மரியாதை செய்யப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
கும்பாபிஷேக விழாவில் ஆலய நிர்வாகிகள் ஓய்வு பெற்ற வங்கி பொது மேலாளர் பாஸ்கரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஓய்வு பெற்ற கல்வித்துறை அலுவலர் ராஜேந்திரன், மடந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசி வர்ணம் தேவர், ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி ஆறுமுகம், பாண்டிக்கண்மாய் கூட்டுறவு வங்கி செயலாளர் கோவிந்தன், பாண்டிக்கண்மாய் பாலமுருகன், பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பாண்டியன் ஆகியோர் முக்கிய பிரமுகர்களுக்கு பொன்னாடைஅணிவித்து வரவேற்றனர்.
விழாவில் பாண்டிக்கண்மாய் ஊராட்சி மன்ற தலைவர் சமயவல்லி சிவானந்தம், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மகாதிருப்பதிசேம்பர் உரிமையாளர் டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் மத்திய சங்க செயலாளர் மாரி தேவன், அ.தி.மு.க.மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட பிரதிநிதி கனகராஜ், பாண்டிக் கண்மாய் கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, ராமநாதபுரம் வேலுமதி, டாக்டர் சண்முகராஜா, வீரசக்தி சேம்பர் பிரிக்ஸ் கோவிந்தராஜ், ஆதித்யா சேம்பர் பிரிக்ஸ் கருமலையான் வல்லவன் சேம்பர் பிரிக்ஸ் மாரிமுத்து, அ.ம.மு.க.ராமச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகளும், ஆலய நிர்வாகிகளும் செய்திருந்தனர்.