< Back
மாநில செய்திகள்
ஊராட்சி தொழிலாளர்கள் மனு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ஊராட்சி தொழிலாளர்கள் மனு

தினத்தந்தி
|
8 Aug 2023 12:15 AM IST

4 மாத சம்பளம் வழங்க கோரி ஊராட்சி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சியில் திடக்கழிவு மையத்தில் வேலை பார்க்கும் பெண்கள் பலர் தங்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும் பலமுறை கேட்டும் தராமல் இருப்பதால் குடும்பத்துடன் கஷ்டப்பட்டு வருவதாகவும் உடனடியாக சம்பளம் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மனு கொடுப்பதற்காக வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்