புதுக்கோட்டை
கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட ஊராட்சி பணியாளர்கள்
|கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி பணியாளர்கள் திரண்ட னர்.
கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரியும், 7-வது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்க வலியுறுத்தியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு திருத்திய ஊதியத்தை வழங்க கேட்டும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஊராட்சி பணியாளர்கள் திடீரென திரண்டனர். ஒன்றிய அலுவலகம் முன்பு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில துணை தலைவர் திரவியராஜ் தலைமையில் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி பணியாளர்கள் திடீரென திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.