< Back
மாநில செய்திகள்
வீடு புகுந்து ஊராட்சி வார்டு பெண் உறுப்பினர்-அக்காள் மீது தாக்குதல்
திருச்சி
மாநில செய்திகள்

வீடு புகுந்து ஊராட்சி வார்டு பெண் உறுப்பினர்-அக்காள் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
24 May 2023 2:36 AM IST

வீடு புகுந்து ஊராட்சி வார்டு பெண் உறுப்பினர்-அக்காள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சோமரசம்பேட்டை:

சோமரசம்பேட்டை அருகே உள்ள புங்கனூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமிர்தராஜ். இவரது மனைவி கோமதி(வயது 33). இவர் உள்ளாட்சி தேர்தலில் புங்கனூர் ஊராட்சி மன்றத்தின் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் (45) வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால் விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் பால்ராஜ், அவரது மகன் மனோஜ் (25), சிவா என்ற சிவகுமார் (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து அத்துமீறி, கோமதி வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட கோமதியின் அக்காள் தவமணியையும்(40) அந்த கும்பல் தாக்கிவிட்டு, தப்பி ஓடினர்.

இதில் கோமதி, தவமணிக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கோமதி அளித்த புகாரின்பேரில் பால்ராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் சோமரசம்பேட்டை போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிவாவை கைது செய்தனர். பால்ராஜ், மனோஜை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்