< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ஊராட்சி செயலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
|12 Oct 2023 6:15 AM IST
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல்லில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல்லில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் மகேஸ்வரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர், ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், அதற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பினர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும்படி வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பாக உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.