கள்ளக்குறிச்சி
ஊராட்சி துணை தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
|ஒன்றிய கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் ஊராட்சி துணை தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் அலெக்ஸ்சாண்டர், நதியா, பொருளாளர் ஜெயராஜ், அமைப்பாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதிகாபாஸ்கர் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்தில் துணைத்தலைவர்களையும் இடம் பெற செய்ய வேண்டும், ஊராட்சி தலைவர்களை போல் துணைத்தலைவருக்கும் தனி இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும், அரசு சார்ந்த தகவல்கள் மற்றும் ஆணைகளை துணைத்தலைவருக்கும் தெரிவிக் வேண்டும், அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வுக்கு செல்லும் பொழுது ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கும் தெரிவிக்க வேண்டும், ஒன்றிய அளவில் செயல்படும் வாட்ஸ்அப் குழுவில் தலைவர், ஊராட்சி செயலாளர் இவர்களுடன் துணைத்தலைவர்களையும் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணை செயலாளர்கள் சபரி, ரஞ்சிதா, சட்ட ஆலோசகர் சித்ரா மற்றும் துணை தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷிடம் அளித்தனர்.