நாகப்பட்டினம்
ரூ.6 லட்சம் நிலத்தை தானமாக வழங்கிய ஊராட்சி மன்ற உறுப்பினர்
|ரூ.6 லட்சம் நிலத்தை தானமாக வழங்கிய ஊராட்சி மன்ற உறுப்பினர்
வாய்மேடு
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியில் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரேஷன் கடை இயங்கி வருகிறது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த ரேஷன்கடை மூலம் 802 குடும்பத்தினருக்கு அரிசி, கோதுமை, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜோதி, அவருடைய கணவர் பாண்டியன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கி உள்ளனர். அந்த நிலத்தை கூட்டுறவு சங்கம் பெயரில் பத்திரப்பதிவு செய்து சங்க தலைவர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினர். இதற்கான நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி செயலாளர் வாஞ்சிநாதன், துணைத்தலைவர் பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.