< Back
மாநில செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசின் ஒரு அங்கமாக இருந்து பணியாற்ற வேண்டும்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசின் ஒரு அங்கமாக இருந்து பணியாற்ற வேண்டும்

தினத்தந்தி
|
25 Jun 2023 5:19 PM IST

ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசின் ஒரு அங்கமாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசின் ஒரு அங்கமாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான இணைய வழி வரி செலுத்துதல், ஒற்றை மையக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன்ள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

ஊராட்சிகளில் அனைத்து விதமான பண பரிவர்த்தனை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசிக்கு குறுந்தகவல் வரும். ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் நீங்கள் அரசின் ஒரு அங்கமாக இருந்து பணியாற்ற வேண்டும்.

உங்கள் ஊராட்சியை பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய செய்ய வேண்டும். மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலமாக மகளிர்களுக்கு கடனுதவிகளை வழங்கி அவர்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.

தூய்மை பணிகள்

மேலும் ஊராட்சிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை தூய்மை பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பப்பட வேண்டும்.

தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை கணக்கீடு செய்துவர வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முழுவதும் தவிர்க்கப்பட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 50 ஆயிரம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யவும், 5 குறுங்காடுகள் அமைக்கப்பட வேண்டும். 1500 பண்ணை குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விருப்பமுள்ள விவசாயிகள் பண்ணை குட்டையை அமைத்து, அதில் மீன்களை வளர்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.

காய்கறி தோட்டங்கள்

குடிநீர் தொட்டிகளை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் தூய்மை செய்வதை உறுதிபடுத்திகொள்ள வேண்டும்.

அனைத்து ஊராட்சிகளுக்குட்பட்ட அங்கன்வாடி மையங்கள் அருகேவுள்ள இடத்தில் காய்கறி தோட்டங்களை அமைத்து குழந்தைகளுக்காக அதிகளவில் காய்கறிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைவரும் தங்களின் ஊராட்சிகளை வளர்ச்சியடைந்த ஊராட்சியாக மாற்றிட சிறப்பாக பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, உதவி திட்ட அலுவலர் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்