ராமநாதபுரம்
ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்
|ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஜானகி, அன்பு கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம், மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார், முதுகுளத்தூர் ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அபூபக்கர் சித்திக், செயலாளர் கதிரேசன் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு பொருளாளர் வினோத் குமார் வரவேற்றார். வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் பயிற்சி சம்பந்தமாக ஊராட்சி தலைவர்களுக்கு விளக்கிக் கூறினார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களின் சந்தேகங்களுக்கு மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம் பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் மேலாளர் ஜெயராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், உலகநாதன், ஊராட்சி செயலாளர்களின் சங்க தலைவர் அந்தோணி, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.