< Back
மாநில செய்திகள்
ஊராட்சி தலைவியின் கணவர் கொலை: 10 பேரை மடக்கி பிடித்த போலீசார்.!
மாநில செய்திகள்

ஊராட்சி தலைவியின் கணவர் கொலை: 10 பேரை மடக்கி பிடித்த போலீசார்.!

தினத்தந்தி
|
27 Jun 2023 3:26 PM IST

கொலை வழக்கு தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவரது மனைவி சாந்தி (40). ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார்.

இன்று காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மதியழகனை நடுரோட்டில் சரமாரியாக வெட்டினர். மதியழகன் முகத்தில் கடுமையாக வெட்டியதால் முகம் முழுவதும் சிதைந்து உருக்குலைந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் நடந்த இடத்திலும், தாழங்குடா கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர். மேலும், கொலை நடைபெற்ற இடத்தில் கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்தனர்.

இந்த நிலையில், கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேரை பிடித்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்