< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
புதுச்சத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி
|18 Dec 2022 12:15 AM IST
புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்தது. புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தனம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் புதுச்சத்திரம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் 35 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் பயிற்றுனர் தினேஷ் குமார் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த பயிற்றுனர் கல்யாணி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளியின் வளர்ச்சிக்காகவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்வித் துறையுடன் இணைந்து பங்காற்றுவது என உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.