< Back
மாநில செய்திகள்
வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு நடந்தது.

திருக்கடையூர்:

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். புரட்டாசி மாத பஞ்சமி திதியையொட்டி வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக வராகி அம்மனுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் திரவியங்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்