< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
பனை விதை நடும் பணி
|22 Oct 2023 1:30 AM IST
பனை விதை நடும் பணி நடைபெற்றது.
நரிக்குடி ஒன்றியம் கடம்பன்குளம் ஊராட்சியில் பனை விதை சேகரிப்பு மற்றும் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் மூலமாக கிழவி குளம், கடம்பன்குளம், சீனிக்காரனேந்தல், பிரண்டைக்குளம் கிராமங்களில் பனைவிதை நடப்பட்டு வருகிறது. ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதியிலும் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு நடப்படும் என ஊராட்சிமன்ற தலைவர் ராக்கு கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.