< Back
மாநில செய்திகள்
பனை விதை நடும் நிகழ்ச்சி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பனை விதை நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
3 Oct 2022 11:32 AM GMT

பொன்னேரி அருகே குளக்கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று 500 பனை விதைகளை ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் நட்டார்.

பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சியில் அடங்கியது கல்மேடு கிராமம். இங்கு அமிர்தசர்வர் திட்டத்தின் கீழ் ஊராட்சி மக்களின் பங்களிப்பிலும் ஊராட்சி மன்ற தலைவர் சொந்த பணத்தின் மூலம் 300 மீட்டர் அகலமும் 150 மீட்டர் நீளமுள்ள புதிய குளம் அமைக்கப்பட்டது. இந்த குளத்தை அமைக்க எடுக்கப்பட்ட மண் முழுவதும் குளக்கரைக்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று குளத்தை ஆய்வு செய்வதற்காக திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் ஜெயக்குமார் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளக்கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று 500 பனை விதைகளை நட்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் உஷாசசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமாவதி, ஊராட்சி செயலாளர் தமிழரசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்