< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பனை விதைகள் நடும் விழா
|5 Oct 2023 11:56 PM IST
பனை விதைகள் நடும் விழா நடந்தது.
வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் குமாரபாளையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து 1,000 பனை விதைகள் நட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் தனலட்சுமி, பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாந்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில்குமார், உதவி திட்ட அலுவலர் தங்கவேல் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.