விருதுநகர்
பாமாயில் விலை குறைந்தது
|விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்துள்ளது.
விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்துள்ளது.
துவரம் பருப்பு
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.11,000 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,400 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.9,800 ஆகவும், பாசிப்பயறு ரூ.7,400 முதல் ரூ.9,100 வரையிலும் விற்பனையானது.
துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோவிற்கு ரூ.3,800 முதல் ரூ.3,900 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.5,500 முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
பாமாயில்
கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.3,030 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.6,270 ஆகவும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.65 விலை குறைந்து ரூ.1,515 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.
நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.100 விலை குறைந்து ரூ.4,900 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,300 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.3,740 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,200 ஆகவும் விற்பனை ஆனது.
பொரிகடலை 50 கிலோ ரூ.4 ஆயிரம் ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,280 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,540 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,050 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,450 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.940 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,800 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.200 விலை குறைந்து ரூ.10 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனையானது.