< Back
மாநில செய்திகள்
பாமாயில் விலை குறைந்தது
விருதுநகர்
மாநில செய்திகள்

பாமாயில் விலை குறைந்தது

தினத்தந்தி
|
16 July 2023 8:33 PM GMT

விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்து காணப்பட்டது.


விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்து காணப்பட்டது.

மல்லி

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.8,400 முதல் ரூ.8,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.11,800 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.10,200 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.10 ஆயிரம் ஆகவும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.12,500 முதல் ரூ.14 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.2,800 முதல் ரூ.3,300 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.500 விலை உயர்ந்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,400 வரையிலும் விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.24 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

பாமாயில்

கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2,950 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.6435 ஆகவும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.25 விலை குறைந்து ரூ.1400 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.

நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.300 விலை உயர்ந்து ரூ.5,700 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.2,350 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.4,020 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டாலுக்கு ரூ.5,520 ஆகவும், பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ.4,150 ஆகவும் விற்பனை ஆனது.

பட்டாணி பருப்பு

மைதா முதல் ரகம் ரூ.4,380 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,700 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,470 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1,430 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.5,600 முதல் ரூ.6,200 வரையிலும் விற்பனை ஆனது.

பட்டாணி பருப்பு ரூ.6 ஆயிரம் ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோவிற்கு ரூ.20,100 ஆகவும், ஏ ரகம் ரூ.20,600 ஆகவும், சி ரகம் ரூ.17,300 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.10,700 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.9600 ஆகவும் விற்பனையானது.

மேலும் செய்திகள்