< Back
மாநில செய்திகள்
பனை ஓலை கைவினை பொருட்கள் கண்காட்சி-நவாஸ்கனி எம்.பி. தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பனை ஓலை கைவினை பொருட்கள் கண்காட்சி-நவாஸ்கனி எம்.பி. தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
25 May 2022 7:11 PM GMT

பனை ஓலை கைவினை பொருட்கள் கண்காட்சி-நவாஸ்கனி எம்.பி. தொடங்கி வைத்தார்

பரமக்குடி

பரமக்குடியில் பனை ஓலை கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, தென் மண்டல கைவினைப் பொருட்கள் இயக்குனர் பிரபாகரன், கைவினைப் பொருட்கள் பயிற்சி உதவி இயக்குனர் ரூப் சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பனை ஓலைகளால் தயாரிக்கப்பட்ட கூடைகள், விசிறிகள், விளையாட்டுப் பொருட்கள், தொப்பிகள், என ஏராளமான பொருட்கள் இடம்பெற்றன. அவைகளை நவாஸ்கனி எம்.பி. பார்வையிட்டு அவைகளின் விற்பனை குறித்தும் பெண்களிடம் கேட்டறிந்தார். பின்பு கைவினைப்பொருட்கள் பயிற்சி அதிகாரி பிரதிஜா கூறுகையில், பனைஓலை பொருட்களில் பலவித பொருட்கள் செய்வதற்கு பெண்களுக்கு மானியத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. கலைநயமிக்க பொருட்கள் செய்து வெளி மாநிலங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. குறைந்த செலவில் அதிக மதிப்புமிக்க பனை ஓலைப் பொருட்கள் செய்வதற்கு வல்லுநர்களால்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் மேற்கொண்டு சிறப்பாக செயல்படுகின்றனர். அதேபோல் பனைஓலை பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்று கூறினார்.

மேலும் செய்திகள்