< Back
மாநில செய்திகள்
கழிவுநீர் கால்வாயாக மாறிய பள்ளிப்பட்டு ஏரி பாசன கால்வாய் - தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கழிவுநீர் கால்வாயாக மாறிய பள்ளிப்பட்டு ஏரி பாசன கால்வாய் - தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
19 Oct 2022 3:15 PM IST

பள்ளிப்பட்டு ஏரி பாசன கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளது. இதை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் தெற்கு பக்கம் மிகபெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து கண்மாய்கள் மூலம் சில பாசன கால்வாய்கள் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. ஏரி தோன்றிய நாள் முதல் இந்தப் பாசன கால்வாய்கள் உள்ளன.

இதில் வடக்கு நோக்கி பாயும் பாசன கால்வாய் அகலம் குறைந்து கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இந்த பாசன கால்வாய் பள்ளிப்பட்டு கொல்லாபுரி அம்மன் கோவில் தெரு வழியாக பல்வேறு விளைநிலங்களுக்கு தண்ணீர் பாயும் பாசன கால்வாயாக உள்ளது.

அதேபோல் கண்மாயிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் மற்றொரு பாசன கால்வாய் குதிரை மேடு கிராமம் வரை உள்ள வயல்களுக்கு தண்ணீர் பாயும் பாசன கால்வாயாக உள்ளது. மேலும் கண்மாயிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் மற்றொரு கால்வாய் கனிக்காலம்மன் கோவில் வரை உள்ள வயல்களுக்கு தண்ணீர் பாயும் கால்வாயாக உள்ளது.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கால்வாய்கள் தூர்வாரப்படாமல் புதர் போல் காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் கூட ஏரி முழுவதும் நிறைந்தும் இந்த பாசன கால்வாய்களில் தண்ணீர் பாயவில்லை. எனவே இந்த ஏரி பாசன கால்வாய்களை தூர்வாரி கால்வாய்களை அகலப்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்