< Back
மாநில செய்திகள்
பள்ளிபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பள்ளிபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
24 Jan 2023 12:15 AM IST

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து நேற்று நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அந்த பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு பள்ளி அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மேலும் அப்பகுதியில் ஆக்கிரமித்து அமைத்துள்ள குடிசை மற்றும் டெம்பொ அலுவலகம் அருகே ஆக்கிரமித்து அமைத்துள்ள குடிசைகளை அகற்றகோரி நோட்டீஸ் வழங்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்