< Back
மாநில செய்திகள்
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கொட்டுவதற்காக  காலாவதியான சாய பவுடர் ஏற்றி வந்த வண்டி சிறைபிடிப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கொட்டுவதற்காக காலாவதியான சாய பவுடர் ஏற்றி வந்த வண்டி சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
2 Dec 2022 12:15 AM IST

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் காவிரி ஆற்று பகுதியில் நேற்று தனியார் சாயப்பட்டறைகளுக்கு சாய பவுடர் விற்பனை செய்யும் கடையில் இருந்து காலாவதியான சாய பவுடர்களை காவிரி ஆற்றில் கொட்டுவதற்காக மாட்டு வண்டி மூலம் கொண்டு வந்தனர்.

இதனை காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பார்த்து காவிரி ஆற்றில் சாய பவுடர்களை கொட்டிய நபர் மற்றும் சாய கழிவுகளை கொண்டு வந்த மாட்டு வண்டியினை சிறைபிடித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற நகராட்சி நிர்வாகத்தினர் காவிரி ஆற்றினை மாசுபடுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட தனியார் சாய பவுடர் கடை உரிமையாளர் வேணுகோபால் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்