< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பள்ளிபாளையத்தில் 3 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி
|29 Sept 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் 3 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகலில் வெயில் அடித்தது. இதையடுத்து மாலையில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் 6 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதையொட்டி மின்சாரமும் 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதையடுத்து 3 மணி நேரம் பின்னர் இரவு 9 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் மின்சாரம் தடையால் பள்ளிபாளையம் நகரம் இருளில் மூழ்கியது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.