நாமக்கல்
பள்ளிபாளையத்தில் ஜவுளிக்கடையில் சேலைகளை திருடிய பெண்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலால் பரபரப்பு
|பள்ளிபாளையத்தில் ஜவுளிக்கடையில் சேலைகளை திருடிய பெண்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலால் பரபரப்பு
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஆர்.எஸ். பிரிவு ரோடு சாலையில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடையில் செந்தில்குமார் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் பெண் ஊழியர் மட்டுமே கடையில் இருந்தார். அப்போது அங்கு சுமார் 50 வயதிற்கு மேற்பட்ட 3 பெண்கள் மற்றும் முதியவர் என 4 பேர் வந்தனர்.
பின்னர் அவர்கள் துணி எடுப்பது போல பாவனை செய்து பெண் ஊழியரை சூழ்ந்து கொண்டனர். அப்போது பெண் ஊழியரின் கவனத்த திசை திருப்பி அவர்களில் ஒரு பெண் சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டன் சேலைகளை திருடுகிறார். பின்னர் 150 ரூபாய்க்கு 2 துண்டுகளை மட்டும் வாங்கி கொண்டு 4 பேரும் சென்று விட்டனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு பெண் ஊழியர் ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்ட சேலைகளின் எண்ணிக்கை குறைந்ததை அறிந்தார். பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது 4 பேர் சேலைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேலைகளை பெண்கள் திருடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது