வேலூர்
பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம்
|பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி மன்ற தலைவர் சுபபிரியா குமரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வசிம்அக்ரம், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னில வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு பேரைத் தவிர 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள 18 வார்டுகளிலும் துரிதமாக செயல்பட்டு பணிகளை முடிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். ரூ.91.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,4,15,5, 12, 16, 13 உள்ளிட்ட வார்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகளை செய்து முடிக்க முடிவு செய்யப்பட்டது. வருகிற 2-ந் தேதி பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒட்டுமொத்த கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டனர். முடிவில் அலுவலக கணினி பொறியாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.
இதேபோல் ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரேணுகா தேவி, கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல்அலுவலர் உமாராணி திட்ட பணிகள் குறித்து பேசினார். அப்போது கவுன்சிலர் மின் மோட்டார்கள் பழுதடைந்து பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே பழுதடைந்த மின்மோட்டோர்களை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
உடனடியாக பழுதடைந்த மின்மோட்டார்கள், சின்டெக்ஸ் தொட்டிகள், பைப்புகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாக செயல் அலுவலர் உமாராணி கூட்டத்தில் தெரிவித்தார்.