< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கூட்டம்
|30 Sept 2023 5:30 AM IST
தேனியை அடுத்த பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தேனியை அடுத்த பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், பேரூராட்சி பகுதிகளுக்கான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், செலவினங்கள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டு, தங்களது வார்டு பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினர். இதில் துணைத்தலைவர் மணிமாறன், பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.